மரத்தை நடுவோம்...!
ஆற்று மண்ணை அள்ளி அள்ளி
நிலத்தில நீரும் இறங்கிப் போச்சி
போரைப் போட்டு உறிஞ்சி உறிஞ்சி
பூமிக்கு நாக்கும் உலர்ந்து போச்சி
மரத்தைவெட்டி மாடிவீடு காட்டின சாபம்
மண்ணை மாசாக்கிவிட்ட மனிதன் பன்னப்பாவாம்
பகுத்தறிவை பேசி பேசி என்ன லாபம்
பட்டமரமில்ல நாடு சுடுகாடாகித்தானே போகும்
சுவரில் மட்டும்மிருக்கு மரம்வளர்ப்போம் வாசகம் - அதை
மனசில் விதைக்காமப் போனது யாரு செய்த மோசம்
குழந்தைகள் வரையும் வீடுகூட மரத்தோடு வரையுது
வளரவளர ஏனது மனசைவிட்டு மறையுது
சுட்டரிக்கும் நேரம் வரப்போ
அந்த மரத்தின் அருமை தெரியும்
மனசு நிழலைதேடி அலையும்
காற்று கூட கனலாகமாறும் நாளை
இதுவே நீ மரத்தை
காக்கச் சரியான வேலை
மண்ணைக் காக்க மரத்தை நடுவோம்
மழையைக் காக்க மரத்தை நடுவோம்
- ஜீவா நாராயணன், கடலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.