சுத்தம் - சுகாதாரம்?
தினமும் தெருவில்
இருக்கும் குப்பைகளெல்லாம்
அவசர அவசரமாக
இன்று அகற்றப்பட்டது
தினமும் குப்பைகள்
அடைத்திருந்த சாக்கடைகளெல்லாம்
அவசர அவசரமாக
இன்று தூர்வாரப்பற்றது
தினமும் சாலை ஓரம்
ஒதுங்கும் சிறார்கள்
இன்று இங்கிருந்து
விரட்டப்பட்டு இருந்தனர்
தினமும் மூத்திரம் பெய்து
ஈரமாக இருந்த
காம்பௌண்டு சுவர் பக்கம்
இன்று ப்ளீச்சிங் பவுடர்
சுகாதார அமைச்சரின் வருகையால்
இந்த இடம் இன்று
சுத்தமாகவும் சுகாதாரமாகவும்
இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்கு
நாளை வழக்கம் போல்
கண்டுகொள்ள மாட்டார்கள்
சுத்தத்தையும் சுகாதாரத்தையும்
சுத்தமும் சுகாதாரமும் என்றும்
ஓட்டு வாங்கிய
அரசியல்வாதிகளுக்குத்தான்
ஓட்டு போட்ட மக்களுக்கு இல்லை
- ஜீவா நாராயணன், கடலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.