உள்ளொளியும்... பக்குவம்!
அழுகையை
புறங்கொண்டுப் போகும்
அவனெல்லை அருகிலிருந்தும்
முடிவில்லாப் பாலையாய்
விரிகிறது.
தேவைக்கதிகமாய்
அவனிடத்தில் சொற்களிருந்தும்
சொல்ல வேண்டியதை
அவனின்னும்
முழுமையாய்ச் சொல்லவில்லை.
அவன்
வழிப்பாதையின் வாசல்கள்
அடைத்திருக்க
அவனைக் கண்டதும்
ஓங்கியடைக்கப் படுகிறது
திறந்திருக்கும் வாசல்கள்.
அவனால்
உள்ளொளியும்
பக்குவத்தை எட்டவியலாத
காரணத்தினால்
இன்னும் திறக்கப்படாமலேயே
இருக்கிறது அவனுக்கான
மரணத்தின் வாசல்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.