புவி போற்றும் பன்முகச்சூரியன்!
(கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி)
தமிழ்த்தாயின் தவமகனே!
‘கலைஞர்’ எனும்
அன்புக் காவியமே!
நீ...
*****
எழுச்சியை உண்டாக்கிய
எழுத்துச் சூரியன்
*****
இதயங்களை வளர்த்த
இலக்கியச் சூரியன்
*****
காலத்தை வென்ற
கலைச் சூரியன்
*****
பகைவரையும் ஈர்த்த
பேச்சுச் சூரியன்
*****
தமிழினத்தைக் காத்த
திராவிடச் சூரியன்
*****
செம்மொழித் தகுதிக்கு உழைத்த
செந்தமிழ்ச் சூரியன்
*****
ஞாலம் போற்றும்
ஞானச் சூரியன்
*****
அரசியல் வானில்
அபூர்வச் சூரியன்
*****
கொள்கை மாறாக்
கொள்கைச் சூரியன்
*****
சோதனைகளுக்கு அஞ்சாத
சாதனைச் சூரியன்
*****
சமத்துவ வெளிச்சம் தந்த
சமூகநீதிச் சூரியன்
*****
உழைப்பே உயர்வென்று உணர்த்திய
உதய சூரியன்
*****
மறைந்தும் மறைவில்லா
மக்கள் சூரியன்
*****
நீயே...
புவி போற்றும்
பன்முகச் சூரியன்
- ம. கவிக்கருப்பையா, பூதிப்புரம், தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.