ஆதிகாதல்
உன்னோடுதான்
பேசுகிறேன்
என்பதை மறந்து
பேசிக் கொண்டிருக்கிறேன்.
அதைக்
கேட்காதது போல
கேட்டுக் கொண்டிருக்கிறாய்
நீயும்.
எனக்கும் உனக்குமான
அந்தப்
புரிதலின் கணங்களைத்
தொலைத்தது
நானுமல்ல நீயுமல்ல
களவாடிச் சென்றது
காலம்.
அது
ஒவ்வொரு யுகத்திற்கும்
காதலை
மிச்சம் வைத்தேப் பிரிகிறது.
காதலைப் பின்தொடர்ந்து
காலத்திற்கும்
விஸ்வரூபம் எடுக்கிறது.
எல்லா
ஜீவன்களுக்குள்ளும்
புரிதலோடும் புரிதலின்றியும்
புதிரும் புதிதுமான
ஆதிகாதல்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.