அது சாத்தியமாகுமா...?
எதுவும்
புலப்படாத பேரிருட்டில்
எதற்காக அம்புகளை
வீணாய் எய்கின்றீர்கள்...?
இருட்டின் குருதி
வெளிச்சம் பீரிடுமென
தீர்மானித்து எய்திருந்தால்
அது முற்றிலும்
பிழையாகிடாதா...?
உங்களை
இனம் கண்ட பின்னரே
வெளிச்சத்தை
நிறைகுடமாய் கொண்டுவர
கிழக்கினில் புதைந்திருக்கிறான்
ஆதவன்.
சுதிமாறாமல்
துள்ளிவரும் அலைகளின்
வழியே
ஆழியைத் துறக்க முற்பட்டு
கலவரக் குரல் கொடுக்கலாம்
நதிகள்.
அது சாத்தியமாகுமா...?
அதுபோலத்தான்
உங்களின் செயலும் பயனற்றது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.