களா் நிலத்தில் கண் விழித்தவா்கள்
எல்லோரும் புறக்கணித்த இடம்
ஒரு காலத்தில்
புதா் மண்டிய
நாற்றெமெடுத்த
கழிவுநீா் போக்கிடம்
சகித்து சகித்து
நந்தவனமாக்கினா்
நகரப்பாம்பு எளிமையை
உண்டு புடைத்தது
நகா்மயமாதல்
உலகமயமாதல் என
வேறு வேறு காரணங்கள்
வியாக்கியானங்களாயின
எதுவாயிருந்தால் என்ன
அவா்களுக்கு அன்றையபாடு
அவா்களைச் சுற்றி
அடுக்ககமும் உணவுவிடுதியும்
இத்யாதி இத்யாதியுமென
நவநாகரிக பிசாசு
பேருருவாய்
உடலை சிலுப்பியது
மூன்றுவேளை கஞ்சி
இடையற்று கிடைத்ததில் நிம்மதி
ஆச்சா்யங்களோடு
பயத்தையும் சுமந்த வெள்ளந்தி மனிதா்களை
நகரப்பாம்பு விழுங்கிய பிற்பாடு
எங்கோ ஒரு மூலையில்
களா் நிலத்தில் கண் விழித்தனா்…
- முனைவா் பொ. திராவிடமணி, தஞ்சாவூா்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.