உண்மையான உறவு
என் இதயத்தின் அரணுக்குள்
விரகத்தீ மூட்டினாய்
உதர விதானத்தில்
தீப்பந்தம் ஏற்றினாய்
நானும் ஒரு ஜீவனாய்
உலகதன் ஓரத்தில்...
நீயோ எனக்குள்ளே
ஜீவனாய் சரீரத்தில்...
என் மூச்செங்கிலும்
ஜீவ நதியானாய்...!
உனக்காய் ஒரு கதையெழுத
எனக்குள் நானே
கருவானேன்...
எனக்கே என்னைத்தெரியாமல்
மீண்டும் உலகில்
உருவானேன்...
உடலுக்குள் உயிரென
உட்புகுந்து - என்
உணர்வுக்கும் அழகாய்
உருக்கொடுத்தாய்–
உருகிய என்னுள்
உறைபனிகள்
உயிரே நீ சீர்படுத்து...
சிதறிய நினைவுக்குள்
சிறையிருக்க - என்
இருதயம் இன்னும்
இரும்பு இல்லை -
சீக்கிரம் வந்தால்
சிறகுகள் முளைக்கும்
உடனே வந்து சமப்படுத்து...
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.