ஒரே ஒரு காரணம்...!
அலுவலகத்திற்கு
மிக அருகாமையில்,
நாலு ரோடு சந்திப்பிலுள்ள
ஆரிய பவன்
நகரில் மிகவும் பிரபலம்...
ரம்மியமான சூழல்
நாவிற்கினிய சுவை
நியாயமான விலை
கனிவான உபசரிப்பு
என்று பிரபலத்திற்கு
எத்தனையோ காரணங்கள்...
கல்லூரி வரை
ஒன்றாய்ப் படித்து,
இப்பொழுது, அங்கு
அடர்நீல சீருடையில்
குல்லாவோடு உணவு
பரிமாறும் கோபாலகிருஷ்ணன்,
'அவமானமாய் உணர்வானோ...?'
என்கிற தயக்கம் மட்டுமே,
மீண்டுமொரு முறை
அங்கு செல்ல எனக்கு
விருப்பமின்றிப் போக,
ஒரே ஒரு காரணம்..!
- ஆதியோகி, திருச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.