ஓரினச் சேர்க்கை
அடுத்த கணம் பற்றி
கவலைக் கொள்ளாத
பட்டாம் பூச்சிகள்
மிக அவசர அவசரமாய்ப்
பறக்கும்.
பசி வந்ததும்
பூக்களிலமர்ந்து
சுவைக்கச் சுவைக்கத்
தேனருந்தும்.
காமப் பசியடங்க
பிறஉயிர்களைப் போல்
அதுவும்
கலவி கொள்ளும்.
இனப்பெருக்கம்
அவசியமென்பதால்.
பகுத்தறிவற்ற
பிறஉயிர்களிடம் மட்டுமல்ல
குறிப்பாய்ச்
சக மனிதர்களிடத்தில்
பின்வரும்
இச்செய்தியைச் சொல்லியாக
வேண்டும்.
சுய இன்பத்தை நாடிக்கொள்
தவறில்லை.
இனம் பெருக வழியற்ற
ஓரினச் சேர்க்கையில்
நலம் கெட்டு
நோய்கள் வலுக்குமென்று...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.