திறந்த மனது
மூடி வைத்திருப்பதால்
யாதொரு பயனுமில்லை
மனதைத் திறந்து வைத்திடுங்கள்.
அக்கம் பக்கமுள்ளவர்கள்
உங்கள் மனதை அறியாமல் போனால்
பரவாயில்லை.
வருத்தப்படாதீர்கள்
அதற்கு வருந்த நேர்ந்தால்
தானாக மூடிக்கொள்ளும் மனக்கதவு.
எங்கும் எப்போதும் நாலுவார்த்தை
நல்லதையேப் பேசுங்கள்.
உள்ளத்தில் கபடமும் கள்ளமும்
குடி கொண்டு விட்டால்
இருண்மைச் சூழ்ந்து பாழ்ப்படும்
பளிங்கு மனது.
நல்மனதுக்குத்தான்
நாகரிகம் தெரியும் நல்வழி அகப்படும்.
தீயவைகளை அண்ட விடாதீர்கள்.
சிலகாலமே வாழ்க்கை
அது - வாழ்வதற்கென்று
அமையப் பெறட்டும்.
ஆதலால்
மனதைத் திறந்தே வைத்திருங்கள்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.