இருக்கும் போதே நடக்கிறது...?
தேசப்பிதா காந்தி
இருக்கிறார்
கர்மவீரர் காமராஜர்
இருக்கிறார்
சட்டமேதை அம்பேத்கர்
இருக்கிறார்
அன்னை தெரேசா
இருக்கிறார்
இரும்பு மங்கை இந்திரா காந்தி
இருக்கிறார்
விஞ்ஞானி அப்துல்கலாம்
இருக்கிறார்
ஆசையைத் துறந்த புத்தர்
இருக்கிறார்
அய்யன் திருவள்ளுவர்
இருக்கிறார்
மகாகவி பாரதி
இருக்கிறார்
தேசத் தலைவர்களின்
புகைப்படங்கள் வரிசையில்
ஒன்று கூடியிருக்க
இவர்கள் முன்னிலையில்
அனைத்து தனியார்
கல்வி நிறுவனங்களிலும்
சுடச்சுட நடக்கிறது
பேரங்கள்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.