கரைந்து போகிறேன்...
நான் உன்னை
மறந்தாலும்
என்னை விட்டுப்
பிரிய மனமில்லையோ...
வாடகை இல்லாமல்
குடிகொண்டு மனதில்
செல்லாய் அறிக்கிறாய்...
கண்ணில் படாமல்
கண்ணாமூச்சி காட்டுகிறாய்...
உன்னைத் தொலைத்து விட
தொலை தூரப் பயணம்
செய்தாலும்
தொடர்கிறாய் நிழலாக...
உன் நினைவால்
இரவில் தூக்கமும் இல்லை...
விடியலில் விழிப்பதும் இல்லை...
தொலைந்து போ...
மனத் துயரமே...
தூண்டில் மீனாய்
சிக்கித் தவிக்கிறேன்...
உனது பாரம் தாங்காமல்
கரைந்து போகிறேன்...
கண்ணீரில் நனைந்து போகிறேன்...!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.