இது கண்ணாமூச்சி ஆட்டமல்ல!
உலகை வெறுத்து
இல்லற வாழ்வில்
நாட்டமிழந்து எதற்கடா
இந்த சந்நியாசி கோலம்...?
இப்படி வாழ வரவில்லை
எப்படியும் வாழ நினைப்பது
வாழ்க்கையுமில்லை.
வாழ வந்துவிட்டு
வாழாமல் தவசிக் கோலம்
ஏன் தரிக்கப் பார்க்கிறாய்...?
இதை
உடுத்திக் கொண்டு
தப்பிக்கப் பார்க்கிறாயா?
அப்படித் தப்பித்தல்
பாவத்திலும் மகா பாவம்.
இன்ப-துன்பமில்லாமல்
வாழ நினைக்கிறாய் என்பது
தெள்ளத் தெளிவாய்
விளங்குகிறது.
போடா போ
உன் ஒப்பனையை
நான் வந்து கலைக்கும்
முன்பு வேடத்தை களைந்தெறி.
கட்டுண்டு வாழ
நீ புத்தன் இல்லை.
பக்குவப்படத்தான்
எனில்
வாழ்ந்து பக்குவப்படு.
ஓடி ஒளிந்து கொள்ள
இது கண்ணாமூச்சி ஆட்டமல்ல
வாழ்க்கை.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.