பஞ்சலிங்கம்
லிங்க ரூபனே! சங்கரதேவனே!வருக!
லிங்க வடிவிலே! சந்திரசூடனே! வருக!
லிங்க மூர்த்தமே! ஒங்காரநாதமே! வருக!
லிங்க உற்சப தேவபூசனை லிங்கமேவருக!
உக்கிரக் கோலத்தில் உருத்திரனே! வருக!
உக்கிரந் தணிக்க கங்கைசூடியே! வருக!
உக்கிரந் தொலைத்து சக்திபாகந் தரித்துவருக!
உக்கிர தேவனே! அசுரபூசனை லிங்கமேவருக!
மனிதத்தன்மை தரும் மாதேவனே! வருக!
மனிதனின் மாசகற்றும் மகாதேவனே! வருக!
மனிதங்காக் கவே!சூலமேந் தியசூன்யமே! வருக!
மனிதசக்தி காணாமானிட பூசனைலிங்கமே! வருக!
தேவமனிதப் பிறப்பின் நடுவேயோருவம் வைத்தவனே! வருக!
தேவமனிதப் பிறப்பிலே மூவாயமைந்த சிவையாய்வருக!
தேவமனித வடிவிலே சாந்தரூபனே! வருக!
தேவமனித வாழ்விலே ரிஷிபூசனை லிங்கமேவருக!
சாந்தம் பெற்றுச்சக் தியும்பெறவே நீவருக!
சாந்தங்கொண்டு லோகங்காக்குந் தாயாய்நீ வருக!
சாந்தப்பிற வாய்பிறந்த தெல்லாமுனை யேயழைக்கும்வருக!
சாந்தமே! நீவருவாய் அஃறிணைப்பூசனை லிங்கமாய்!
பஞ்சலிங்கமே! பஞ்சகவ்வி யத்தில் வடித்ததில்,
பஞ்சமிலா வாழ்வளிக்க; அருள்தர வேள்வி
பஞ்சமிலாமற் செய்து; பஞ்சாட்சரமே யெம்
பஞ்சமிலா பக்கபல மெனருள் வாயே!
- ப. வீரக்குமார், திருச்சுழி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.