அன்பின் அர்த்தங்கள்
என் வலியை அறியாமல்
இருப்பதே உத்தமம்.
உன்னிடம் அதன் நிலை குறித்து
விவரித்தல் மிகவும்
சிரமமென்று நினைக்கிறேன்.
இதை நீ புரிந்து கொள்வாய்.
என்வலி உன் வலியாய் மாறுவதில்
எனக்குத் துளியும் விருப்பமில்லை.
தேகச்சூடு குறைய சவமாகிறது
உடல்.
பேதம் பார்க்காமல் பழகியவர்கள் நாம்
இந்நிலை நமக்கு வேண்டாம்.
துயரத்தின் பித்தத்தில் ஆழ்த்தும்
நம் வலிகளை யாருக்கும்
பரிசளிக்க வேண்டாம்.
மனக்காயங்களை ஆற்றிட
அன்பை மயிலிறகாய்க் கொண்டு
வருடிக்கொள்வோம்.
வாழ்க்கையில்
அன்பின் முத்தங்கள் அர்த்தம்
நிரம்பியது.
அதை பேதமின்றி வறியவர்க்கும்
கொடுத்து மகிழ்வோம்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.