புரியாமல் தேடினேன்
நண்பனின் மணவிழா மேடைக்கு அருகே
துணைப் பொண்ணா? என் மனப் பொண்ணா?
மனதுக்குள் துடித்த உணர்வுகள் நிரம்பி
பேச அலைந்தேன் அவள் பின்னாலே
இந்த ஊரில் நாய்கள் அதிகம்
தோழியிடம் கூடி அங்கதம் செய்தாள்
பந்தியில் பரிமாறும் முந்திச் சென்றாள்
பிடிக்காத பெண்ணிடம் பிடித்தது பைத்தியம்
துரத்தி துரத்தி மெய்யைச் சொன்னேன்
அவள் இடது பக்கம் பார்த்து
களுக்கென சிரித்து ஓடினாள்
புரியாமல் தேடினேன் புதிராக ஓடினேன்
இதயம் இருக்கா உனக்கு என்றாள்
மிரண்ட பார்வையில் பேதையாய் நின்றேன்
நான் எடுத்த பின்னே எப்படி?
அதிசயத்து நின்றேன் பதிலுக்கு தாயென்று...!
- ப. வீரக்குமார், திருச்சுழி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.