கர்வம் கொள்ளடிப் பெண்ணே...!
நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகக்
கர்வம் கொள்ளடிப் பெண்ணே...!
முதலல் மாணவியாகத் திகழ்ந்து,
பட்டங்களைப் பெற்றதற்கு
கர்வம் கொள்ளடி பெண்ணே...!
பெற்றோருக்கு நல்ல பெயர்
வாங்கி தந்தேனென
கர்வம் கொள்ளடி பெண்ணே...!
புகுந்த வீட்டிலும்
நல்ல மருமகளாக திகழந்து
ஒருதாயாக வலம் வருவதில்
கர்வம் கொள்ளடி பெண்ணே...!
தமிழ் நாட்டில் முறத்தால்
புலி விரட்டிய வீரமங்கைகளில்
வழி வந்தவளாகக்
கர்வம் கொள்ளடி பெண்ணே...!
ஜான்சி ராணி தில்லையாடி வள்ளியம்மை
போன்ற வீரபெண்மணிகளின்
வழி வந்ததை எண்ணிக்
கர்வம் கொள்ளடி பெண்ணே...!
நாட்டில் ஓடும் நதிகளுக்கெல்லாம்
கருணையின் நிதியாகப்
பெண்ணின் பெயரையேச் சூட்டிய
ஆடவரின் தாயாகம் கண்டு
கர்வம் கொள்ளடி பெண்ணே...!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.