அப்படியே மீதமிருக்கிறது.
உன்னிடம்
காட்டவேண்டிய
எனது காயங்களும்
ரணங்களும்
இன்னும் மீதமிருக்கிறது.
உங்கள் அனைவரின்
மனநிலையும்
சேர்ப்பின் எதிர்திசை
பயணமாய் இருக்க;
சற்றே
சாயவும் இளைப்பாறவும்
மடிகளையும் தோள்களையும்
தேடி அலைகிறேன்.
ஒன்று மட்டும்
எனக்கு
நிச்சயமாய்த் தெரிகிறது.
இந்த அவசர யுகத்தில்
எனக்காக
சில கணங்களை ஒதுக்கி
என்னைத் தட்டிக்
கொடுத்து தேற்ற
ஏனோ உங்களில்
ஒருவருக்கும்
மனமுமில்லை நேரமுமில்லை.
அதனளவில்
கொஞ்சம் கூட குறையாமல்
உன்னிடம்
காட்டவேண்டிய
எனது காயங்களும்
ரணங்களும்
இன்னும்
அப்படியே மீதமிருக்கிறது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.