மார்கழி வருகிறாள்...!
வருகிறாள் மார்கழி...
மார்கழி வருகிறாள்...
நல்ல பனியோடும்,
பெரிய கோலங்களோடும்,
மார்கழி வருகிறாள்...
அற்புதமான குளிரோடும்,
ஜோரான பூசணிப் பூக்களோடும்
மார்கழி வருகிறாள்...
அழகான பஜனையோடும்,
சூடச்சுட பொங்கலோடும்,
மார்கழி வருகிறாள்...
ஆண்டாள் நாச்சியாரோடும்,
அவள் தோழிகளோடும்
மார்கழி வருகிறாள்...
திருப்பாவையோடும்,
கோபிகைகளின் விரதத்தோடும்
மார்கழி வருகிறாள்...
வைகுண்ட ஏகாதசியோடும்,
மோட்சத்தோடும்
மார்கழி வருகிறாள்...
கிருஷ்ணரின் குசேலரோடும்,
அவரின் அவலோடும்
மார்கழி வருகிறாள்...
தொண்டரடிப்பொடியாழ்வாரோடும்,
அனுமன் ஜெயந்தியோடும்
மார்கழி வருகிறாள்...
நம்மை ஆட்கொள்ள
கிருஷ்ணனாகவே
மார்கழி வருகிறாள்...
வா...வா...
மார்கழியைப் போற்றுவோம்...
வா...வா...
மார்கழியைக் கொண்டாடுவோம்...
வா...வா...
மார்கழியில் மகிழ்ந்திருப்போம்....!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.