இனிதே விடிந்து முடித்திருக்கிறது
தெறிக்கும்
வியர்வைத் துளிகளை
மழையென நினைத்து
குடை விரிக்கிறாய்.
அது மழையல்ல
வியர்வையென தெரிந்ததும்
தடாகத் தாமரையாய்
முகம் மலர்கிறாய்.
அதில் மகிழ்ச்சியுடன்
நனையவும் குளிக்கவும்
விழைகிறாய்.
இருவரும் இணைந்து
காம வாகனம் ஏறி
நனைந்து குளித்து முடித்த
நாளில்...
நமக்காக
அந்தரங்கம் கழற்றிய
இரவு புதுப்பொலிவுடன்
இனிதே
விடிந்து முடித்திருக்கிறது.
இன்னொரு நீள் இரவை
அன்பு நிறைந்த
காதலோடும் காமத்தோடும்
இனிதே
நமக்காகச் சுமப்பதற்கு.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.