அசலூர்க்காரனின் கைவரிசை
அவ்வழியே
போகும் போதும் வரும் போதும்
பார்த்திருக்கிறேன்
நடை திறந்திருக்கும்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
பின்பொருநாள்
அவ்வழியே பயணிக்க
கோயில் வாசல் மூடியிருந்தது.
ஆங்காங்கு குழுமியிருந்தனர்
மக்கள்.
அக்கூட்டத்தில் ஒருவன்
உரக்கக்
கூவிக் கொண்டிருக்கிறான்.
இது உள்ளுர்க்காரனின்
வேலையல்ல
அசலூர்க்காரனின்
கைவரிசையென்று.
என்னவென்று
அங்கிருந்தவனிடம் விசாரிக்க
ஐம்பது கிலோ ஐம்பொன்
சாமி சிலையை
யாரோ கடத்தியதாக
மொழிகிறான்.
அகிலம் காக்கும்
சாமி சிலை கொள்ளை போன
தகவலறிந்து காவல்துறை
விரைந்து வர
அந்த அகாலப் பொழுதிலும்
காட்டுத்தீ போல் பரவியது
அச்செய்தி.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.