வரலாற்றை மாற்றிய கீழடி

நதிக்கரையில்பிறப்பதுதான்நாகரீகம்
நம்முடையவைகைநதிக்கரையிலின்று
புதியதொருவரலாற்றைஎழுதுதற்குப்
புதையலெனக்கிடைத்ததுதான்கீழடிச்சான்று !
மதியுடனேபண்பாட்டில்உயர்ந்துநின்ற
மாயினந்தான்தமிழனென்றேஉரக்கச்சொல்ல
முதிர்தொன்மைஇனமென்றுஞாலம்ஏற்க
முன்நிற்கும்உண்மைகள்தாம்கீழடிச்சான்று !
சிந்துவெளிதாம்தொன்மைஎன்றுரைக்கும்
சிறப்பானஆய்வுகளைவிஞ்சும்வண்ணம்
சிந்தையெல்லாம்இனித்திடவேசங்கநூல்கள்
சித்தரிக்கும்பலபொருள்கள்கீழடிமண்ணில் !
விந்தையன்றுகல்மணிகள்கொண்டைஊசி
விளையாட்டுப்பொருள்களுடன்சுடுமண்பொம்மை
செந்தமிழன்நூல்நூற்றதக்கிளிஎன்றே
செழுமையானசான்றுகளைத்தந்ததிம்மண் !
பட்டினப்பாலையென்னும்நூல்தாம்கூறும்
பருகுதற்குநீரெடுக்கும்உறைகிணற்றை
கட்டடங்கள்எல்லாமேசுட்டசெங்கல்லால்
கட்டியோட்டால்வேய்ந்துளதைஅகழ்ந்தெடுத்தார் !
மட்பாண்டஓடுகளில்தமிழெழுத்து
மாத்தமிழின்தொன்மையினைக்காட்டும்சான்று
வெட்டவெளியானதின்றுகீழடியாலே
வெளியுலகம்கண்டதின்றுதமிழர்மேன்மை !
இந்தியாவின்வரலாற்றைத்தமிழ்நாட்டிருந்தே
இனியெழுதவேண்டுமிந்தகீழடியாலே
முந்தியிங்கு*சனோலியை*வாட்டூதம்மை
முறையாகப்பாதுகாப்புஇடமாய்ச்செய்த
இந்தியாவின்நடுவரசுகீழடிதம்மை
இருவிழியாய்ப்பாதுகாத்தேஆயவேண்டும்
நந்தமிழர்நாமொன்றாய்க்குரல்கொடுத்தே
நம்தொன்மைபெருமையினைக்காப்போம்வாரீர் !
*(உ.பியில் உள்ள சனோலி, குஜராத்திலுள்ள வாட்டூ தொல்லியல் பகுதிகளை இந்திய அரசு பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது)
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.