வீழ்ச்சியை எழுச்சியாக்கும் நம்பிக்கை
சூழ்ந்திருக்கும்தடைகள்தம்வகையறிந்து
சூழ்ச்சிகளால்பின்னிருக்கும்வலையறிந்து
வீழ்ச்சிக்குவித்தாகும்செயலறிந்து
வினைகளினைநாமாற்றமுனையவேண்டும் !
வாழ்க்கையிலேஎதிர்நிற்கும்மேடுபள்ளம்
வந்துபோகும்இன்பதுன்பமுரண்கள்தாக்கம்
வீழ்த்துதற்கேஎப்போதும்காத்திருக்கும்
விழிப்போடுநாமிருந்தால்வெற்றிகொள்வோம் !
பெரும்பொருள்தாம்நம்கையில்இருந்தபோதும்
பெரும்வட்டம்துணையாகநின்றபோதும்
வருகின்றஇடர்களினைஅறியவைக்கும்
வாலறிவுபெற்றவராய்த்திகழ்ந்தபேதும்
உருவானபலதிட்டம்கண்கள்முன்னே
உயிர்ப்போடுதெளிவாகஇருந்தபோதும்
கருவானநம்பிக்கைமனத்திற்குள்ளே
கால்பதிக்கவில்லையென்றால்நடவாதேதும் !
ஊக்கம்தாம்ஒருவரிடம்இல்லையென்றால்
உதவாதேஎத்தனைதாம்உடனிருந்தும்
தாக்குதலைமுறியடிக்கமுடியும்என்ற
தன்னம்பிக்கைநம்மனத்தில்இருக்கவேண்டும் !
ஏக்கங்கள்நான்காணும்கனவெல்லாமே
எதிர்பார்த்தபடிவாழ்வில்நடப்பதற்கும்
ஆக்கந்தான்வருவதற்கும்தளர்ச்சியில்லா
அரும்முயற்சிநம்பிக்கைவேண்டும்நமக்கே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.