முன்னோர் வழியில் முறியடிப்போம்!
கொல்லுகின்றநுண்ணுயிரிவந்ததென்று
கோடிமக்கள்அச்சமுடன்அலறுகின்றார்
வெல்லுதற்குவழியிங்கேஇருக்கும்போது
வேதனையில்எதற்காகத்துடிக்கவேண்டும் !
பொல்லாதகாலராவைபிளேக்கையெல்லாம்
பொலிவிழக்கச்செய்துபுறமுதுகில்ஓட
நல்லபடிநம்முன்னோர்செய்தபோல
நாமின்றுசெய்தாலேஓடும்கரோனா !
படிப்பறிவுஇல்லாததாத்தாபாட்டி
பட்டறிவால்தொற்றுநோயைத்தோற்கடித்தார்
படியேறிவீட்டிற்குள்வருமுன்நீரால்
பார்த்துக்கைகால்களினைக்கழுவச்சொன்னார் !
பிடிப்போடுகைகளினைக்குலுக்கல்இன்றிப்
பிணைத்திரண்டுகைகளாலேவணக்கம்சொன்னார்
குடிப்பதற்குச்சீரகத்தைச்சேர்த்தநீரைக்
குடுவையிலேபாதுகாத்துப்பருகத்தந்தார் !
வீடுகளைச்சாணத்தால்மெழுகினார்கள்
வீட்டின்முன்வேப்பிலையைச்சொருகினார்கள்
கூடுதலாய்ச்சாம்பிராணிப்புகையைப்போட்டுக்
கூடத்தில்வேப்பெண்ணெய்விளக்கைவைத்தார் !
கேடுதனைச்செய்யவரும்கிருமியெல்லாம்
கேள்வியின்றிமடிந்ததுவேநுழையுமுன்பே
நாடுதனைக்காப்பாற்றதனித்திருந்தே
நாமுமவர்செய்ததுபோல்செய்தேவெல்வோம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.