கிடைக்காமல் போனால்...
நேற்றைய
நண்பகலிலிருந்து எனது
வாழ்க்கைப் புத்தகத்தின்
கடைசி பக்கத்தை
காணவில்லை.
வழுவழுப்பான தாளில்
பல வண்ண மையினால்
அழகாய் அச்சிடப்பட்டிருந்தது.
அந்தத் தாளின் மேல்
பகுதியின் வலது பக்க
மூளையில்
அடையாளத்திற்காக சற்று
மடித்து வைத்திருந்தேன்.
கீழ்ப் பகுதியின்
நடுவில் பக்கத்தின் எண்
நிச்சயம்
குறிக்கப்பட்டிருந்தது.
அப்பக்கத்தில்
பாலினப் பாகுபாடின்றி
என்னை
யாருக்கு தருவதெனும்
முக்கியச் செய்தி
அச்சிடப்பட்டிருந்தது.
அந்நபர் யாரென
தெரியாமல் துக்கத்தில்
அழுது கொண்டிருக்கிறது
என் வாழ்க்கைப் புத்தகம்.
ஒருவேளை
அப்பக்கம் கிடைக்காமல்
போனால்
உங்களில் யாரேனும்
ஒருவருக்குத் தான்
என்னைத் தந்தாக வேண்டும்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.