வெளிச்சப் பருக்கைகள்
பாசி படர்ந்த
குளக்கரையோரம்
குளத்து நீரில் முகம்
பார்த்தபடி
கிளைபரப்பி நிற்குதொரு
பெருமரம்.
அதன்வழிச் சல்லடையாய்
குளத்தில்
வியாபித்திருக்கிறது
கதிரவனின்
வெளிச்சப் பருக்கைகள்.
மீன் குஞ்சுகள்
பசி மயக்கத்தில்
அதைப் பொரிகளென
கடிக்க
பாசியையும் நீரையும் உண்டு
பசியாறிடும்
அதன் பசிப் பொழுதுகள்.
குளம் வற்றிய
ஒரு பெருங்கோடையில்
பறவைகளின்
அலகிற்கும், வலைக்கும்
தப்பிய மீன் குஞ்சுகள்,
தவளைகளின் முட்களையுண்டு
தற்போது
பசியாறிக் கொண்டிருக்கின்றன
கடுந்தவக் கதிரவனின்
வெளிச்சப் பருக்கைகள்.....!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.