நல்லவையால் அல்லவையை வெல்வோம்
அதிகாரம்உள்ளதென்றேஆட்சியாளர்
அரசியலார்மிரட்டிடுவர்அஞ்சிடாதே
புதிபுதிதாய்த்தொல்லைகளைவலிமையுள்ளோர்
புரிந்துன்னைவதைத்திடுவர்துவண்டிடாதே !
சதிசெய்துதுரோகத்தால்முதுகில்குத்திச்
சாய்த்திடுவர்நண்பர்கள்நொந்திடாதே
விதியென்றேஇருந்திடாமல்எதிர்க்கநின்றால்
விளைவித்ததீயோர்கள்நடுங்கிப்போவர் !
இன்னல்கள்செய்தார்கள்என்றேநீயும்
இன்னலினைஅவர்க்கிழைத்தால்பகையேஓங்கும்
துன்பத்தைத்தந்தவர்க்குநன்மைசெய்து
துணைநின்றால்பகைநீங்கிநட்பேபூக்கும் !
வன்மத்தைவன்மத்தால்அறுக்கஎண்ணின்
வாள்பிடித்தோன்வாளாலேசாதல்உண்மை
அன்பொன்றேஅனைத்தையுமேஅணைக்கவைக்கும்
ஆயுதமாம்அதைக்கொண்டோர்தோற்றதில்லை !
சினமென்றும்சாதனையைநிகழ்த்திடாது
சீற்றமுடன்செயும்செயலோமுடிந்திடாது
மனம்ஆசைக்கடிபணிந்தால்அறிவிழந்து
மாசுகளைச்செய்வதற்குத்தயங்கிடாது !
வனங்கள்தாம்நற்காற்றைநமக்களித்து
வான்முகிலைமழையாகமாற்றல்போன்றும்
தனமிரண்டும்குழந்தைபசிதீர்த்தல்போன்றும்
தமராக்கும்நன்மைசெயல்தீமைவென்றே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.