அறைகூவல்
அறைகொடுத்தநேருகாலம்எனநினைத்தே
ஆணவத்தில்வென்றிடுவோம்எனக்குதித்தே
அறைகூவல்விடுத்தெல்லைவந்தசீனா
அதிர்ந்ததுவேஇந்தியப்போர்முறையைக்கண்டு
கறைபடிந்தமுகமாகிப்பாக்கித்தானைக்
கார்கில்லில்ஓடவைத்தஇராணுவத்தின்
விறைப்புதனைக்கண்டெதிர்த்துநிற்பதற்கே
வீரமின்றிப்பதுங்கியதுஎல்லைக்குள்ளே !
எதிர்வந்தால்தொற்றிடுவேன்எனமிரட்டி
எல்லோரின்வாய்மூக்கைமூடவைத்துப்
புதிராகஉலகத்தைஅஞ்சவைத்துப்
புதுப்புதிதாய்உருமாற்றம்செய்துகொண்டு
குதித்திங்கேஅறைகூவல்விட்டழிக்கும்
குரோனாவைத்தனித்திருந்தும்தூய்மையோடும்
விதித்தபடிஇடைவெளியைக்கடைபிடித்தும்
விரட்டிடுவோம்உடலெதிர்ப்புசக்திசேர்த்தே !
உயர்சாதிக்பெண்ணைக்கீழ்ச்சாதிஆணோ
உள்ளத்தில்நினைப்பதுவேதீட்டாம்என்று
புயம்தட்டிஅறைகூவல்விட்டுவீதிப்
புழுதியிலேகாதலனைவெட்டுகின்ற
கயமைக்குமுடிவொன்றைஎழுதவேண்டும்
கலப்புமணம்புரிவேரைப்பாதுகாத்துத்
தயவின்றிஆணவத்தின்கொலைதடுக்கத்
தகுசட்டம்உருவாக்கம்செய்வோம்வாரீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.