காட்சியும் மாட்சியும்
அடிபட்டுச்சாலையிலேவிழுந்திருக்கும்
அவலமானகாட்சிதனைப்பார்த்தவாறு
கடினமானமனத்துடனேகடந்திடாமல்
கருணையுடன்அவர்க்குதவிசெய்யும்போது
துடிக்கின்றஅவருயிரும்உடலில்நிற்கும்
துயரத்தில்மூழ்காமல்குடும்பம்வாழும்
நடிக்கின்றமனிதர்க்கேஎடுத்துக்காட்டாய்
நாம்முதலில்செய்திடுவோம்தொடர்வர்வந்தே !
நடைபாதைதனிலெந்தக்காப்புமின்றி
நலிந்தோர்கள்வாழ்கின்றகாட்சிகண்டும்
விடையின்றிஅவர்வாழும்அவலம்கண்டும்
வினாவெழுப்பிமாற்றுதற்குமுயன்றிடாமல்
நடைபோட்டுக்கடப்பதுவாமனிதநேயம்
நன்றாகஅவர்வாழவழியைச்செய்து
குடையாகநாமிருந்தால்பிடிப்பதற்குக்
குடையோடுவருவார்கள்பார்ப்பவர்கள் !
ஆட்சியாளர்மக்கள்தம்வரிப்பணத்தை
அதிகாரச்செருக்கோடுசுருட்டுகின்றார்
ஆட்சிக்குத்தூண்போன்றஅலுவலர்கள்
அவர்க்கிணையாய்க்கையூட்டுவாங்கின்றார் !
காட்சியாகக்கண்டுமிதைக்காணார்போன்று
கடப்பவர்நல்குடிமக்கள்ஆகமாட்டார்
கேட்கின்றதுணிவோடுசேர்ந்தெழுந்தால்
கேடகன்றுநல்லாட்சிதருவர்நன்றே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.