கடலோரம் வாங்கிய காற்று
கடலோரம்வாங்கியநல்காற்றிலன்று
காவிரிபூம்பட்டினத்தில்யவனரோடு
நடந்திட்டநாள்அல்லங்காடிதம்மில்
நறும்பொருள்கள்வாங்கிட்டபெண்கள்கூட்டம்
கடல்கடந்துவந்திட்டபொருளையெல்லாம்
கணித்துநின்றுவாங்கிட்டஆண்கள்கூட்டம்
திடமானசோழநாட்டுமுத்தைவாங்கத்
திரண்டஅயல்நாட்டாரின்மணம்வீசிற்று!
தரைப்படையைமட்டுமன்றுஅறிந்தபாரில்
தவழ்ந்துகடல்செலும்கப்பல்படைநடத்தி
வரைப்படத்தில்இல்லாதநாட்டையெல்லாம்
வளைத்துவாகைசூடிட்டசோழமன்னன்
திரையாகக்கொண்டுவந்தபொருளைத்தொட்டுத்
திரண்டவெற்றித்தோள்தழுவிவந்தகாற்றைக்
கரைநின்றுசுவாசித்தகாட்சியெல்லாம்
கண்முன்னைஏக்கத்தைத்தந்ததின்று!
இந்திரனுக்கெடுத்தவிழாகடற்கரையில்
இன்றுகாணும்பொங்கலுக்குவிழாவெடுத்தே
சந்ததியர்ஒன்றுகூடிப்பொறுப்பேயின்றிச்
சந்தைபோலக்குப்பைகொட்டிமாசைச்சேர்க்க
வந்துசெல்லும்வாகனங்கள்புகையும்சேர
வாய்மூக்குள்செலும்காற்றோநஞ்சாயிற்று
சிந்திப்பீர்காற்றினிலேதூய்மைகாப்பீர்
சிறப்பாகநோயில்லாவாழ்வமைப்பீர்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.