சுழியம்
சுழியத்தின்மதிப்புதனைவகைப்படுத்திச்
சூத்திரத்தைஅளித்திட்டஆரியபட்டா
வழிதனிலேகணிதத்தைப்போடுகின்றார்
வானியலைக்கணிக்கின்றார்அறிஞர்இன்று !
விழியைப்போல்நீள்வட்டவடிவம்கொண்டு
விண்மீதுசுழல்கிறதுபூமியென்றார்
விழிபிதுங்கவியந்திட்டார்உலகத்தார்கள்
விளக்கிட்டகணிதமுறைஅறிவைக்கண்டே !
சுழியத்தைப்போலிருக்கும்நீர்க்குமிழ்தான்
சுழல்கின்ற வாழ்க்கையிங்கே வெடிக்கும்முன்பு
கழிகின்றநாள்கள்போல்வீணாக்காமல்
கல்வெட்டாய்நிற்கும்நற்செயல்கள்செய்தால்
சுழிகள்முன்நிற்கின்றஒன்றைபோன்று
சுழல்கின்றபூமியிலேமதிப்பர்உன்னை
குழிபறிக்கும்செயல்செய்தால்சுழிதனித்தால்
குறிக்கின்றமதிப்பைத்தான்அளிக்கும்ஞாலம் !
சுற்றங்கள்சுழியம்போல்கைகள்கோத்துச்
சுழன்றொன்றாய்இருந்தால்தான்குடும்பம்ஓங்கும்
வெற்றிதோல்விசுழன்றுவரும்சுழியம்போல
வென்றிடலாம்தளராமல்முயலும்போது !
சுற்றிவரும்இன்பதுன்பம்சுழியம்போல
சுழற்சியினைச்சமமாகஏற்றால்இன்பம்
பெற்றியுடன்வாழ்ந்திடுவீர்ஒன்றின்முன்னால்
பெறுகின்றசுழிகள்தம்மதிப்பைப்போன்றே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.