முயல்வோம் வா...!
வியாக்யானங்களை விடுத்து,
விசனங்களைக் கடத்தி,
விருந்து போல் மகிழ்ந்து,
மருந்துதனை விடுத்து,
பாரம்பரியப் பண்பினை வளர்த்து,
பைந்தமிழ் கூற்றினை எடுத்து,
பசும் நினைவுகளை நிறுத்தி,
துன்பங்களைத் தூர எறிந்து,
துயிலினை விடுத்து,
தீங்கரும்பாய் சொற்றுணை கொண்டு,
தூவெண் மனமாய் திருத்தி,
ஆயுத மேந்தாமல்,
அருந்தமிழ் கொண்டு,
உலகை வெல்லும்,
உன்னதக் கொள்கையால்,
தீமையினை வென்று,
தீதருங் குணத்தைக் கொன்று,
பூவுலகைப் பூவாய் மாற்ற
முயல்வோம் வா...!
- ப. வீரக்குமார், திருச்சுழி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.