கெடுவதும் வருவதும்
கண்டிக்காத பிள்ளை கெடும்
கருத்தில்லாத கவிதை கெடும்
தண்டிக்காத குற்றம் எழும்
தராத அரசு விரைவில் விழும்
கடன் பட்டாலே வாழ்வு கெடும்
கதிர் பட்டாலே நோய்கள் கெடும்
உடன்பட்டாலே தீமை எழும்
உயிர் விட்டாலும் மானம் அழும்
பிரிந்து நின்றால் உறவு கெடும்
பிழைகள் மலிந்தால் நாடு கெடும்
வரிந்து கட்டினால் கோபம் வரும்
வலிந்து உதவினால் நட்பு வரும்
சிந்திக்காத செயல்கள் கெடும்
சிரிப்பால்லாத முகமும் கெடும்
முந்தி மறைத்தால் உதவி கெடும்
மூப்பில் முறைத்தால் பதவி கெடும்
அதிக பணத்தால் அமைதி கெடும்
அச்சம் மிகுந்தால் உணர்வு கெடும்
புதிய மனத்தால் வாழ்வு யரும்
புரிந்து நடந்தால் இமயம் வரும்!
- கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.