ஒழுக்கம் தரும் வெற்றி
ஒழுக்கம் வேண்டும் நமக்கு
உயரும் வாழ்வு நிலைக்கு
அழுக்கு நீங்கும் மனத்தில்
ஆமாம் உறுதி தினத்தில்!
வள்ளுவர் சொன்ன உயிர் இது
வாழ்வில் அதுதான் உயர்வது
நல்லன காட்டும் குறள்படி
நடப்போம் வாழ்வில் உயர்படி
ஒழுக்கம் பேசும் இலக்கியம்
உள்ளன தமிழில் நிறைவளம்
முழக்கும் அறிவுரை முன்னேற்றம்
முழுதும் கற்போம் நல் நாட்டம்
உயிரை உடலைக் காத்திடும்
உலகம் உயர்வைப் பார்த்திடும்
அயரா உழைப்பு சேர்த்திடும்
அனைத்தும் வெற்றி ஒழுக்கத்தால்!
- கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.