மலை
குறிஞ்சியெனும்பெயர்தாங்கிக்குமரனுக்குக்
குடியிருக்கஇடமளித்துப்பெருமைபெற்றாய்
குறிஞ்சிமலர்மலரவைத்துச்சிறப்புபெற்றாய்
குஞ்சரங்கள்நடமாடஇடமளித்தாய் !
அறிஞர்தம்நாவினிலேமேருவெற்பு
அரிகுன்றம்எனப்பலவாய்ப்பெயர்கள்பெற்றாய்
செறிதமிழின்அகத்திணையில்முதல்திணையாய்ச்
செவ்வாழ்வைக்களவினிலேதொடக்கிவைத்தாய் !
கருமுகிலைத்தடுத்துமழைபெய்யவைத்தும்
கவின்தோகைமயில்களினைவிரியவைத்தும்
அருவிதனைப்பிறப்பித்துநதிகளுக்கும்
ஆற்றுக்கும்தாயாகத்திகழுகின்றாய் !
அருமருந்துமூலிகைகள்செடிவளர்த்தே
அனைத்துவகைநோய்களையும்போக்குகின்றாய்
செருநரினைஉள்நுழையவிட்டிடாமல்
செம்மாந்துநாடுகாக்கும்அரணாய்நின்றாய் !
மடிப்புமலைபிண்டமலைஎரிமலையாய்
மண்மீதுபெயர்பெற்றேஅழைக்கப்பெற்றாய்
முடிமீதுகுளிர்ச்சியுடன்சுற்றுலாவின்
முகமாகத்திகழ்ந்தழகில்ஒளிருகின்றாய் !
கடிவாளம்இல்லாமல்காற்றுவீசக்
காண்கின்றஇடமெங்கும்பசுமைவாசம்
விடியலினைக்கதிர்முளைத்துநமக்குக்காட்டும்
விந்தைநிறைமலைகளினைப்பாதுகாப்போம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.