சாமியார்கள் நமக்கெதற்கு?
துறந்தவரைத்துறவியெனஅழைத்தாரன்று
தூரவொருகாட்டினிலேகுடிலமைத்துப்
புறத்துறவுஏதுமின்றிஅமைதியாகப்
புரிந்திட்டார்தவமென்றுசொல்லுவார்கள் !
அறவழியும்மரவுரியும்தரித்துக்கொண்டும்
அருந்தநீரும்கனிகளையும்உண்டவாறும்
சிறந்தநூலைப்போலறிவும்ஞானம்பெற்றுச்
சீர்வொழுக்கப்பண்பினிலேஇருந்தார்அன்று !
ஆன்மீகம்எனும்பெயரில்சாமியார்கள்
ஆரவாரவாழ்க்கையின்றுநடத்துகின்றார்
ஊன்உறக்கம்எல்லாமேமாளிகைக்குள்
உலாசெல்லவிலையுயர்ந்தவாகனங்கள் !
வான்கடந்தஅயல்நாட்டில்நிலையாய்ச்சொத்து
வங்கிகளில்பலகோடிஉல்லாசங்கள்
தேன்போன்றபெண்கள்தம்கூட்டத்தோடு
தெளிஞானஅறவுரைகள்தனியறைக்குள் !
புலனடக்கிவாழ்ந்திட்டார்முனிவரென்று
புராணங்கள்சொல்வதினைப்போற்றும்நாம்தாம்
புலனுணர்ச்சிகாமத்தைக்காவிஆடை
புனைந்துள்ளேசெய்பவரைவணங்குகின்றோம் !
நலமெல்லாம்அவர்நாவின்சொற்களாலே
நமக்கிங்குவருவதில்லை !நம்கையாலே
நிலந்தன்னில்உழைத்தால்தான்வருமெல்லாமே
நினைவிலிதைநிறுத்தினாலேவீழ்வர்பொய்யர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.