கவிதை என் காதலி
கண்மூடி நானிருக்க
கதைபேசும் காவியம்...
விண்பார்த்து நான் சிரிக்க
வியப்படையும் பேரெழில்...
நடைபோடும் வேளையில்
எடை போடும் உள்ளத்தை
நற்காட்சி நான் கண்டிடவே
நயம்பட உரைக்கும் காதலி...
சோர்ந்து நின்ற வேளைகளில்
சுகம் மீட்டும் ராகமாகும்...
கணம் தோறும் நான் சிலிர்க்கும்
கனாக்கால விழாக்கோலம்...
வாய்மொழியா வார்த்தைகள்
வாஞ்சையாய் வரிகளில் ஆடும்...
தேன் நிறைக்கும் பூவுள்ளம்
தெவிட்டாத இன்பம் சொல்லும்...
கருத்தரித்தே உருவெடுக்கும்
கண்மறைத்தே விளையாடும்
உள்ளங்கையில் ஜதி போடும்
கள்ளத்தனமாய் காதல் செய்யும்...
முக்கால நிகழ்வுகளும்
எக்காலமும் இயைந்தே நிற்க
முத்தாய்ப்பாய் முடிவின்றி
தப்பாமல் சொல்லி விடும்...
கவிதை என் காதலி..!
- அன்புடன் ஆனந்தி, மிச்சிகன், வட அமெரிக்கா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.