தொடராத விழாக்களில்...
நகராது நங்கூரம் போடப்பட்ட
நாடோடிகள் வாழ்வு!
விழாக்கால வெளிச்சத்தில்
விதியெல்லாம்
விளையாடும்
ஆசை மனதின்
இசைவில் விலையாகிப் போகும்
பொருளுக்கு அசையும் வாழ்க்கை...
விலகியேக் கிடக்கிறது
முடங்கியேக் கிடக்கிறது நெடுநாளாய்!
வீதி, கடைவீதியாய்
உருமாறும் ஊர் விழாவில்...
உயிர்வாழும் ஓர் கூட்டம்!
நழுவிய விழாக்களால்
கவலை தழுவியேக் கிடக்கிறது!
விழாவேயில்லை...
வீதியில் சில விழாக்காலக் கடைகள்
வாழ்வின் விடைகளைத் தேடி
முகாம் போட்டே நம் முகம் பார்க்கும்
அவர்களை விட்டுவிடாதீர்கள்...
மகிழ்ச்சியை நிரப்பிப்போகும்
விழாக்கால வாசிகள்...
வசிப்பில்தான்
இன்னும் திருவிழாக்கள்
தொடர வேண்டியுள்ளது!
அவர்களை விட்டுவிடாதீர்கள்!!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.