தோகை மயிலே வாழி
கார்மேகம்கண்டாயோமயிலேஉன்றன்
கவின்தோகைவிரித்தெதற்குக்காட்டுகின்றாய்
யார்வந்துசொன்னார்கள்விரிக்கவென்று
யார்மெச்சவேண்டுமென்றுவிரித்தாய்தோகை
தேர்போலநீயசையும்அழகைப்பார்த்துத்
தேடிவரும்பெண்மயில்தான்எனவிரித்தாயோ
சீர்போலஇயற்கைதந்ததோகைகாட்டிச்
சிதைக்கின்றாய்காண்போரின்மனங்கள்தம்மை !
கல்லுக்குச்சேலையினைக்கட்டினாலும்
காமத்தால்துணிவிலக்கிப்பார்ப்போர்போன்றும்
எல்லைக்குள்நிற்காமல்பெண்கள்தம்மின்
எழில்மதித்துப்போற்றாமல்கெடுத்தல்போன்றும்
எல்லேரும்அழகென்றேஒவ்வொன்றாக
எடுத்துன்றன்தோகையினைச்சிதைப்பர்சேர்ந்தே
பொல்லாதநகருக்குள்வந்திடாதே
பொலிவிழந்துபோயிடுவாய்பெண்கள்போன்றே !
மலைசார்ந்தகுறிஞ்சியின்நல்பறவையாகி
மலையமர்ந்தமுருகனின்நல்ஊர்தியாகித்
தலைதூக்கிஅகவுகின்றமயிலேஉன்னைத்
தம்பாட்டில்பாடாதகவிஞரில்லை
குலைநடுங்கிக்குளிரில்நீதவித்தபோது
குஞ்சுகாக்கும்கோழிபோலபோர்வைதந்து
நிலைத்துள்ளான்பேகனின்றும்வள்ளலாக
நினைப்பாடிநானுமிங்கேநிலைப்பேன்வாழி !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.