மறைந்து போன மரபுகள்
அன்பொழுகஅம்மாவென்றழைத்ததெல்லாம்
ஆங்கிலத்தில்மம்மியெனமாறிப்போச்சு
இன்பநிலைகாட்டிச்சோறூட்டிவிட்ட
இனியகாட்சிதொலைக்காட்சிப்பெட்டியாச்சு !
நன்றாகப்பாடிவந்ததாலாட்டெல்லாம்
நாகரிகக்கைப்பேசிக்குரலாய்ஆச்சு
கன்னல்போல்பாலூட்டும்போதேசேர்த்துக்
கனித்தமிழைஊட்டியதும்மாறிப்போச்சு !
வீட்டிற்குள்நோய்கிருமிநுழைவதற்கு
விட்டிடாமல்மெழுகிட்டசாணம்இல்லை
வீட்டிற்குள்வெப்பத்தைத்தணிப்பதற்கு
வீசிவந்தபனையோலைவிசிறிஇல்லை !
வீட்டிற்குள்பாட்டியிடம்பேரன்பேத்தி
வியந்துகதைகேட்டிட்டகாட்சிஇல்லை
வீட்டிற்குள்நடைபயிலகுழந்தைகையில்
வீற்றிருந்தநடைவண்டிஏதும்இல்லை !
ஆல்வேம்பில்பல்விளக்கிஆற்றுநீரில்
அடித்தெதிர்த்துநீந்தியதுபோனதின்று
கால்கைகள்வீசியன்றுநடந்தபோது
கண்குளிரப்பார்த்தவயல்இல்லையின்று !
சேல்விழியாள்முகத்தினிலேமஞ்சள்பூச்சும்
செந்நுதலில்குங்குமமும்இல்லையின்று
பால்போன்றமனத்துடனேபழகிவந்த
பாசமெல்லாம்எந்திரமாய்ஆனதின்று !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.