கவிஞனாக... ஆசை!
என் கவிதைகளுக்கு பயணிக்க ஆசை...
ஏதாவது ஒரு புத்தகத்தில்...
நாளிதழ், வார இதழ் மாத இதழ்...
மின்னிதழ்... என
ஏதாவது ஒன்றின்
பக்கத்தில் பதிவாகிப்
பயணிக்க ஆசை!
ஆசையாய் கண்பார்த்து
படிக்கும் கையோடு
பயணிக்கும் புத்தகத்தோடு
பயணிக்க ஆசை!
விருதுகள் எல்லாம் தேவையில்லை...
விரும்பித்தேடும் கவிதையாய்
வாழவே ஆசையாம்!
எனக்கு மட்டுமல்ல
நான் கடந்து போன கவிதைகள்
அதே ஆசையில்
மிதந்து போவதாகவேத் தெரிகிறது!
பயணச்சீட்டு வாங்கவே
பரிதவிக்கிறது என் கவிதைகள்...
குழந்தைகளுக்குப் பின்...
அதிகம் கொஞ்சி மகிழ்வது
தூக்கிச் சுமப்பது
மடியில் மலர்வது புத்தகங்கள் தானே...!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.