கனவில் வந்து போகிறது...
பள்ளமும் மேடுமாய்
உயிரற்றுக் கிடக்கும் திடமே!
உள்ளமெலாம் உனைப் பாடி
அழையுதே அழகனவே!
சொல்ல ! பதில் சொல்ல
வாயற்றுப்போன நிலவே!
பகலவனின் ஒளிக்கீற்றில்
நீ பல்லைக்காட்டும் கதையெனக்குத் தெரியும்...
பகலை வஞ்சித்து இரவில்
நீ நடத்தும் உலாவும் புரியும்...
தெரிவதில் மட்டுமே
நீ தேய்வதும் வளர்வதும் மனது அறியும்...
உன் வெளிச்சத்தின் தேவையை
மின் விளக்கு விலக்கி வைத்துவிட்டது...
உன்னையெட்டிப் பார்த்த விண்கலமும்
இன்னும் உயிரைக் காணவில்லை...
சில விண்கலங்களின் உயிரும் காணவில்லை!
மதியவள் முகமென
மதிகெட்டு வர்ணிப்பதைத் தாங்காமல்...
கண்ணுக்கு எட்டும் தூரத்து நிலாவே...
கயிறில் கட்டி இழுத்து
வரும் ஆசை... என்
கனவில் வந்து போகிறது...
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.