களத்தில் நிற்க வேண்டும்
ஆடுகளம்தான்வாழ்க்கைவெற்றிதோல்வி
அடுத்தடுத்துவருமதனைஎதிர்கொள்ளாமல்
ஓடுபவன்ஓடிடுவான்களத்தைவிட்டே
ஓடாமல்எதிர்நிற்போன்நிலைத்துநிற்பான் !
தேடுகளம்உலகந்தான் ;உழைக்கும்கண்ணால்
தெடெதையும்ஒளிபிறந்துவழியைக்காட்டும்
போடுகளம்மனத்திற்குள்தன்னம்பிக்கை
போட்டதிலேஆடிப்பார்இனிக்கும்வாழ்க்கை !
போர்க்களம்தான்வாழ்க்கையதில்பிரச்சனைகள்
போர்தொடுக்கும்பகைவனைப்போல்எதிரேநிற்கும்
தேர்ந்தநல்லவீரனாகஎதிர்த்துத்தாக்கு
தெறித்துப்பின்வாங்கியோடும்கோழையாக !
நேர்மையொடுஉண்மையெனும்களத்தில்நின்று
நேர்தாக்கும்கயவரினைஎதிர்த்துத்தாக்கு
மார்தட்டிவந்தவர்கள்மாண்டுபோவர்
மாறாதவிழுப்புண்ணால்இனிக்கும்வாழ்க்கை !
பள்ளியெனும்களத்தினிலேஒழுக்கத்தோடு
பாடத்தைக்கற்றால்தான்சிறக்கும்வாழ்வு
குள்ளநரிக்கூட்டத்தின்களமாய்மாறிக்
கூறுபோடும்அரசியலைத்திருத்தாவிட்டால்
கள்ளர்கள்களமாகஆட்சியாகிக்
கண்ணீரில்தான்மக்கள்மூழ்கவேண்டும்
துள்ளிளமைஇளைஞரெல்லாம்களத்தில்நின்று
தூய்மையினைப்பாதுகாத்தால்இனிக்கும்வாழ்க்கை !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.