ஏனோ குறையவில்லை!
விடியலின் அறிகுறிகள்...
அழுத்தமாய் என்னை எழுப்ப...
கூடிய உணவுப்பட்டியல்
தேடித்தேடி சுவைக்க தூண்டும் நாக்கு...
இதனால் கூடியேப்போன எடை!
நெடிய காலை நடையில்
கொழுப்பு மடிய
எடை குறைய...
நெடுநாள் திட்ட வடிப்பின்
நினைப்பு எழுப்பியது...
நடப்பதாய்
சில நாட்கள்...
நடந்தேறிய காலைப் பொழுதில்...
நடைப்பயிற்சி!
நடப்பாய் வந்த நட்பூக்கள்...
காற்றோடு கைகுலுக்கிப்போன
வடைகளின் வாசனை...
நாளாக நாளாக
நடையைச் சிதைத்து
வடைக்கடையில் நிறுத்திவிட்டதே...!
நடைப்பயிற்சி தவறினாலும்...
வடைக்கடை செல்லும்...
முயற்சி தொடருகிறதாம்...
நடந்தும் எடை ஏனோ
குறையவில்லையே...
வீட்டிலிருந்து...
எழுப்பிய வினா... விடையேது...?
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.