அந்த மரங்கள்...!
நகராமல் நின்று நாளெல்லாம்
அடையாளம் காட்டிய...
அந்த நாவல் நெல்லி கொடுக்காப்புளி... மரங்கள்...
நிழலுக்குள் நலம் விசாரிக்க
யாரையாவது நிறுத்தியே வைத்திருந்த
அந்த மரங்கள்...
அறுக்கப்பட்டதில் முகவரிகளைத்
தொலைத்திருக்கிறது ஊர்கள்...
விலாசத்தை விசாரிக்க
விழியின் தேடலில்...
புதிதாய் முளைத்திருந்த ஒரு பூங்கா !
வாசலில் புதியகடை!
விலாசம் சொல்லத்தெரியாத
கடைக்காரர்...
முழிக்க...
சிரித்துக்கொண்டதாய் தெரிந்தது...
அந்தக்கடையின்
ஒட்டு... நெல்லி! நாவல் !புளி !அழகாய்!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.