திண்ணை சேவைகள்...?
குறுக்கும் நெடுக்குமென...
தேவையின் நீளத்தில்
தேவையற்றுப்போனது...
திண்ணைகள்
திண்ணை சேவைகள்...!
நெடுங் கதையாடலும்
அக்கம் பக்கம்
அலசி ஆலோசனையும்
ஆராய்ச்சியும்
விலகியே போனது...
திண்ணையோடு!
வெற்றிலைப் பாக்கு சுண்ணாம்போடு...
காலம் தள்ளிய பாட்டிக்கள் தாத்தாக்கள்...
திண்ணையில்லாது
தொல்லைகளாகி...
நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
முதியோர் இல்லத்தை!
திண்ணைக்காவல்...
வெற்றிலைப் பாக்கு...
சுண்ணாம்போடு...
தாத்தா
பாட்டியின் வேவுப்பணிக்குமுன்...
தோற்றேப் போகின்றன...
சிசிடிவி காமிராக்கள்...!
கண்காணிப்பு ஒளிப்பதிவுப் பேழைகள்!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.