உனைத் தேடி வெற்றி வரும்
வாழ்க்கையெனும்போர்க்களத்தில்வலிமையுள்ளோன்
வளர்வெற்றிதொடர்ச்சியாகப்பெற்றதில்லை
வீழ்த்தவேறுவலிமையுள்ளோன்வந்துவிட்டால்
வீழ்ந்திடுவான்முன்புவெற்றிபெற்றவன்தான்
வாழ்க்கையெனும்போர்க்களத்தில்வேகத்தோடு
வருபவனோதொடர்வெற்றிபெற்றதில்லை
வீழ்த்தவேறுவிரைவுடையோன்வந்துவிட்டால்
வீழ்ந்திடுவான்முன்புவெற்றிபெற்றவன்தான் !
களத்தினிலேசமவலிமைபெற்றிருந்த
கர்ணனுடன்அருச்சுனன்தான்மோதும்போதும்
உளத்தினிலேசமஉறுதிகொண்டிருந்த
உரப்பீமன்துரியோதனன்மோதும்போதும்
அளவிட்டுச்சொல்வதற்கும்இயலாவண்ணம்
அவரவர்கள்திறமையுடன்புரிந்தபோதும்
தளர்ந்திடாதநம்பிக்கைகொண்டதாலே
தாம்வென்றார்பீமனுடன்அருச்சுனன்தான் !
எப்போதும்நிதானம்தான்வெற்றிதன்னை
எடுத்தளிக்கும்என்பதினைஆமைசொல்லும்
தப்பாகித்தோல்விவரும்விவேகமின்றித்
தானென்றஆணவத்தில்செய்யும்போது
கப்பலோடக்கடல்தேவைவிமானத்திற்குக்
காண்கின்றவானத்தின்பரப்புதேவை
தப்பாமல்வெற்றியினைத்பெறுவதற்குத்
தன்னாலேமுடியுமென்றஉறுதிதேவை !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.