மழைத் தொட்டி(ல்)
உறவில்லை...
இருந்தும் விசாரிப்புக்குள்...
வந்தே போகும்...
உயிர்ப்பான ஒரு தொடர்பு!
உறவைக் கடந்து
உயிர்கள் உறவாடும்
உயர்வான சொந்தம்...!
சிலருக்கு... பிடிக்கும்...
சிலருக்கு... கசக்கும்...
உயிர்ப்போடு உறவுகள் மேம்பட...
தொடர்ந்து
வானம் விட்டு வந்து சேரும்
மழையைத்தான் சொன்னேன்!
அழையா விருந்தாளியாய்...
அடித்துப் பெய்யும் மழை...
தங்கிப்போக...
மழைநீர் சேமிப்புத் தொட்டி...
தொட்டியா அது தொட்டில்
பசுமையை வளமையை
தாலாட்டும் தொட்டில்...!
தொட்டில் தேவைதானே!
மழைக்கு!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.