வலிக்கும் வாசிப்பு
வாசிப்பின் வசீகரம்...
வலுவிழந்து கிடக்கிறது!
வரிகளின் நீளத்தை...
வரிச்சுமையாய் பார்க்கிறது...
விழிகள்!
படமில்லா கவிதைகள்...
பார்வையில் படாமலே...
ஏனோ விலகியே
விரைகிறது!
பழக்கப்பட்ட பரிச்சை...
பாதிப்பில்!
பக்கம் முழுவதும்
நீண்ட கவிதைகள்...
பக்கம் பக்கமாக
நீண்ட கட்டுரைகள்...
நீண்ட கதைகள்...
பெருவினாவின்...
விடையென...
விலக்கியே வைக்கின்றன விழிகள்!
போதாதென்று...
தாய்மொழியை தள்ளிவைத்த
கல்வி வழி...
வலிக்கத்தானே
செய்யும் வாசிக்க!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.